பழம்பெரும் பாலிவுட் நடிகர் திலிப் குமார் மருத்துவமனையில் அனுமதி

 
Dilip-Kumar

பழம்பெரும் பாலிவுட் நடிகர் திலிப் குமார் மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கடந்த 1940-ல் தொடங்கி 2000-ன் முற்பகுதி வரை இடைவிடாது நடித்துக் கொண்டிருந்தவர் பாலிவுட் நடிகர் திலீப் குமார். நடிப்பு மட்டுமில்லாமல், தயாரிப்பு, திரைக்கதை எழுத்து, என இந்தித் திரையுலகில் தன்னை முழுமையாக ஈடுப்படுத்திக் கொண்டவர்.

2000 முதல் 2006 வரை ராஜ்யசபா உறுப்பினராகவும் பதவி வகித்தவர். இந்திய சினிமாவுக்கு இவரது சேவையைப் பாராட்டி 2015-ம் ஆண்டு 'பத்மவிபூஷன்' விருதை அளித்து இந்திய அரசு இவரை பெருமைப் படுத்தியுள்ளது. இதேபோல் பாகிஸ்தானின் உயரிய விருதான 'நிஸான் ஈ இம்தியாஸ்' என்ற விருதை பாகிஸ்தான் அரசு 1998-ல் வழங்கி இவரை சிறப்பித்துள்ளது.

98 வயதான திலீப்குமாருக்கு வயது முதுமை காரணமாக அடிக்கடி உடல்நலக்குறைவு ஏற்பட்டு வருகிறது. இந்த நிலையில், திலிப் குமாருக்கு நேற்று சுவாச பிரச்சினை ஏற்பட்டதையடுத்து மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

கடந்த மாதம் வழக்கமான மருத்துவ பரிசோதனைகளுக்காக இதே மருத்துவமனையில் நடிகர் திலிப் குமார் அனுமதிக்கப்பட்டார். அனைத்து பரிசோதனைகளும் செய்யப்பட்டதையடுத்து, உடனடியாக மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.  கடந்த ஆண்டு திலிப் குமாரின் இரு சகோதரர்கள் கொரோனா தொற்று பாதிப்பால் உயிரிழந்ததனர்.

From around the web