அக்கா தயாரிப்பில் கீர்த்தி சுரேஷ் நடிக்கும் ‘வாசி’

 
Keerthy-suresh-and-his-sister

கீர்த்தி சுரேஷ் தனது அக்கா தயாரிப்பில் உருவாகும் படத்திற்கு ‘வாசி’ என்று பெயரிடப்பட்டுள்ளது.

நடிகை கீர்த்தி சுரேஷ் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, பின்னர் கதாநாயகியாக மாறியவர். தமிழில் நடிகர் விக்ரம் பிரபுவுக்கு ஜோடியாக ‘இது என்ன மாயம்’ படத்தில் அறிமுகமானார். இதை தொடர்ந்து சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக இவர் நடித்த, ‘ரஜினிமுருகன்’ மற்றும்  ‘ரெமோ’ ஆகிய படங்கள் அடுத்தடுத்து வெற்றி பெற்றது.

கீர்த்தி சுரேசின் அப்பா ஒரு தயாரிப்பாளர் என்பது பெரும்பாலானவர்களுக்கு தெரிந்த தகவல். அவருடைய அக்கா ரேவதியும் தயாரிப்பாளர் என்பது நிறைய தயாரிப்பாளருக்கு தெரியாத தகவல்.

இவர், ரேவதி கலாமந்திர் என்ற பட நிறுவனத்தை நடத்தி வருகிறார். இந்த பட நிறுவனம் சார்பில் ஓசையே இல்லாமல், ரேவதி 33 படங்களை தயாரித்து இருக்கிறார்.

அடுத்து தயாரிக்கும் 34-வது படத்துக்கு ‘வாசி’ என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. இது, கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கதையம்சம் கொண்ட படம். கதாநாயகி, கீர்த்தி சுரேஷ். இவருக்கு ஜோடியாக டொவினோ தாமஸ் நடிக்கிறார். கீர்த்தி சுரேசின் அக்கா ரேவதி தயாரிக்கிறார். இயக்குபவர், விஷ்ணு. படப்பிடிப்பு இம்மாதம் தொடங்குகிறது.

கீர்த்தி சுரேஷ் தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய 3 மொழி படங்களில் நடித்து வருகிறார். இந்த 3 மொழிகளில், தெலுங்கு படங்களுக்கு அவர் அதிக முக்கியத்துவம் கொடுக்கிறார். அங்கேதான் அதிக சம்பளம் கொடுக்கிறார்களாம்.

From around the web