கொரோனா ஊரடங்கு காரணமாக முடங்கும் புதுப்படங்கள்

 
கொரோனா ஊரடங்கு காரணமாக முடங்கும் புதுப்படங்கள்

தமிழகத்தில் கொரோனா பரவலைத் தடுக்க மேலும் சில கட்டுப்பாடுகளை தமிழக அரசு விதித்துள்ளது. அதில் திரையரங்குகள், உடற்பயிற்சி கூடங்கள், கேளிக்கை விடுதிகள், பார்கள், பெரிய அரங்குகள் இயங்க அனுமதியில்லை என்று அறிவித்துள்ளது.

அரசின் இந்த அறிவிப்பால் திரைக்கு வர தயாராக இருந்த பல புதிய படங்கள் முடங்கி உள்ளது. விஜய்சேதுபதி நடித்துள்ள துக்ளக் தர்பார், லாபம். சிம்புவின் மாநாடு, சிவகார்த்திகேயனின் டாக்டர், விக்ரம் பிரபுவின் டாணாக்காரன், அதர்வா நடித்துள்ள குருதி ஆட்டம், ஆர்யாவின் சர்பட்டா பரம்பரை, ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்த கிரேட் இந்தியன் கிச்சன் உள்ளிட்ட படங்களும், 50 மேற்பட்ட சிறு பட்ஜெட் படங்களும் அடுத்தடுத்து திரைக்கு வர இருந்த நிலையில் கொரோனா ஊரடங்கு காரணமாக  தியேட்டர்களை மூடியுள்ளதால் முடங்கி உள்ளன. இதனால் தயாரிப்பாளர்களுக்கு பல ஆயிரம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது.

From around the web