மீண்டும் கமலுடன் ஜோடி சேரும் திரிஷா

 
Trisha-Kamal

மீண்டும் கமல்ஹாசன் ஜோடியாக திரிஷா நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

கமல்ஹாசன் நடிக்கும் இந்தியன் 2 படப்பிடிப்பில் ஏற்பட்ட சிக்கல்கள் சமரச பேச்சுவார்த்தைகள் மூலம் சமீபத்தில் தீர்க்கப்பட்டதால் பட வேலைகள் விறுவிறுப்பாகி உள்ளது. இந்தியன் 2 படப்பிடிப்பை அடுத்த மாதம் மீண்டும் தொடங்க ஏற்பாடுகள் நடக்கின்றன.

இந்த நிலையில் இந்தியன் 2 படத்தில் கதாநாயகியாக நடித்த காஜல் அகர்வால் கர்ப்பம் காரணமாக படத்தில் இருந்து விலக முடிவு செய்து இருக்கிறார். எனவே காஜல் அவர்லால் நடித்த காட்சிகள் அனைத்தையும் நீக்கிவிட்டு அவருக்கு பதிலாக வேறு கதாநாயகியை நடிக்க வைக்க படக்குழுவினர் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

இதுபோல் படத்தில் போலீஸ் கதாபாத்திரத்தில் நடித்த மறைந்த நடிகர் விவேக் கதாபாத்திரமும் மாற்றப்பட உள்ளது. இந்நிலையில் தற்போது காஜல் அகர்வாலுக்கு பதிலாக திரிஷாவை நடிக்க வைக்க படக்குழுவினர் பேசி வருவதாகவும் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் தகவல் வெளியாகி உள்ளது.

திரிஷா ஏற்கனவே கமல்ஹாசனுடன் இணைந்து மன்மதன் அம்பு, தூங்காவனம் ஆகிய படங்களில் நடித்துள்ளார். தற்போது 3-வது முறையாக கமல் படத்தில் இணைகிறார். மணிரத்னம் இயக்கும் பொன்னியின் செல்வன் படத்தில் திரிஷா நடித்து முடித்துள்ளார்.

From around the web