விஜய் சேதுபதியின் ‘லாபம்’ படத்தின் டிரெய்லர் வெளியீடு

 
Laadam

சமீபத்தில் மறைந்த இயக்குநர் எஸ்.பி. ஜனநாதனின் கடைசிப்படமான ‘லாபம்’ திரைப்படத்தின் டிரெய்லர் இன்று வெளியானது.

இயற்கை, புறம்போக்கு எனும் பொதுவுடமை, ஈ உள்ளிட்ட படங்களை இயக்கியவர் இயக்குநர் ஜனநாதன். அதனைத் தொடர்ந்து நடிகர் விஜய் சேதுபதி கதாநாயகனாக நடிக்கும் லாபம் என்கிற படத்தை இயக்கியுள்ளார். விஜய் சேதுபதிக்கு ஜோடியாக ஷ்ருதி ஹாசன் நடித்துள்ளார். இசையமைப்பாளர் இமான் இசையமைத்துள்ள இந்தப் படத்தை 7சி என்டர்டைன்மெண்ட் நிறுவனம் தயாரித்துள்ளது.

லாபம் படத்தின் இயக்குநர் ஜனநாதன் சமீபத்தில் மரணம் மற்றும் கொரோனா சூழல் காரணமாக படம் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டது. எனினும் நீண்ட முயற்சிக்கு பின் லாபம் திரைப்படம் செப்டம்பர் 9-ம் தேதி திரையரங்குகளில் லாபம் திரைப்படம் வெளியாக உள்ளது.

இந்நிலையில், இப்படத்தின் டிரெய்லர் இன்று வெளியானது. நடிகர் விஜய் சேதுபதி டிரெய்லரை தனது சமூக வலைத்தள பக்கத்தில் வெளியிட்டார். இடதுசாரி கதைக்களத்தை அடிப்படையாகக் கொண்ட திரைப்படத்திற்கான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகரித்துள்ளது.

From around the web