சிம்புவின் ‘மாநாடு’ படத்தின் டிரெய்லர் வெளியீடு

 
Maanaadu-trailer

சிம்பு நடிப்பில் உருவாகியுள்ள ‘மாநாடு’ படத்தின் டிரெய்லர் இன்று வெளியானது.

வெங்கட் பிரபு இயக்கத்தில் சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் உருவாகி வரும் படம் ‘மாநாடு’. இந்தப் படத்தில் சிம்பு கதாநாயகனாக நடிக்கிறார். மேலும் கல்யாணி பிரியதர்ஷன், பாரதிராஜா, இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர், எஸ்.ஜே.சூர்யா, ஒய்.ஜி.மகேந்திரன், டேனியல் பாலாஜி, மனோஜ், பிரேம்ஜி, உதயா, அரவிந்த் ஆகாஷ், படவா கோபி, அஞ்சனா கீர்த்தி மற்றும் பலர் நடித்து வருகின்றனர்.

இந்நிலையில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ‘மாநாடு’ திரைப்படத்தின் டிரெய்லர் இன்று வெளியானது. இதனால் சிம்பு ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.

இரண்டு நிமிடம் 9 வினாடிகள் நீளம் ஓடக்கூடிய இந்த டிரெய்லரை டைரக்டர் ஏ.ஆர்.முருகதாஸ், நடிகர்கள் நிவின் பாலி, ரக்‌ஷித் ஷெட்டி மற்றும்  நானி உள்ளிட்டோர் ட்விட்டரில் வெளியிட்டனர்.


 

From around the web