‘ஜாங்கோ’ படத்தின் டிரெய்லர் வெளியீடு

 
Jango

மனோ கார்த்திகேயன் இயக்கியுள்ள ‘ஜாங்கோ’ படத்தின் டிரெய்லர் வெளியாகி உள்ளது.

மனோ கார்த்திகேயன் எழுதி இயக்கியுள்ள படம் ‘ஜாங்கோ’. இப்படம் இந்திய அளவில் முதல் முறையாக டைம் லூப் அடிப்படையில் எடுக்கப்பட்டுள்ளது.

இந்தப் படத்தை தயாரிப்பாளர் சி.வி.குமாரின், திருக்குமரன் என்டர்டெயின்மென்ட் மற்றும் சுரேந்திரன் ரவியின் ஜென் ஸ்டுடியோஸ் இணைந்து தயாரித்துள்ளது.

சதீஷ் குமார் மற்றும் மிருணாளினி ரவி முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்க அனிதா சம்பத், ஹரிஷ் பெறடி, வேலுபிரபாகரன், கருணாகரன், ரமேஷ் திலக், டானியல் மற்றும் நக்கலைட்ஸ் தனம் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

கார்த்திக்.கே.திலக் ஒளிப்பதிவில் சான் லோகேஷ் படத்தொகுப்பு செய்துள்ள ஜாங்கோ படத்திற்கு முன்னணி இசையமைப்பாளர் ஜிப்ரான் இசையமைத்துள்ளார்.

இந்நிலையில் இந்தப் படத்தின் படத்தின் டிரெய்லர் தற்போது வெளியாகியுள்ளது.

ஈரம், வல்லினம் மற்றும் முண்டாசுப்பட்டியில் உதவி மற்றும் இணை இயக்குநராக பணியாற்றியுள்ள மனோ கார்த்திகேயன் இந்தப் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகியுள்ளார். தன்னுடைய முதல் படத்திலேயே வித்தியாசமான இந்த முயற்சியை அவர் மேற்கொண்டுள்ளார்.

தமிழில் டைம் டிராவல் குறித்த படங்கள் வெளிவந்துள்ள நிலையில் டைம் லூப்பை மையமாக கொண்டு தன்னுடைய படம் உருவாகி வருவதாகவும் ஒரே நாளில் நடக்கும் சம்பவங்கள் குறித்த படம்தான் ஜாங்கோ என்றும் மனோ கார்த்திகேயன் குறிப்பிட்டுள்ளார். மேலும் படம் வித்தியாசமான திரைக்கதையுடன் எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.


 

From around the web