ஹர்பஜன் சிங் நடித்துள்ள ‘ஃப்ரண்ட்ஷிப்’ படத்தின் டிரெய்லர் வெளியீடு

 
Friendship

கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் தமிழில் நடித்துள்ள ‘ஃப்ரண்ட்ஷிப்’ படத்தின் டிரெய்லர் வெளியாகி உள்ளது.

இந்திய கிரிக்கெட் அணியின் முக்கியமான சுழற்பந்துவீச்சாளர்களில் ஒருவர் ஹர்பஜன் சிங். இவர் தன்னுடைய அசத்தலான பந்துவீச்சின் மூலம் பல முறை இந்திய அணியை வெற்றி பாதைக்கு அழைத்து சென்றுள்ளார். தற்போது ஐபிஎல் போட்டியில் மட்டும் விளையாடி வந்த நிலையில், ‘ஃப்ரண்ட்ஷிப்’ படத்தில் நடித்துள்ளார்.

ஜான் பால்ராஜ் மற்றும் ஷாம் சூர்யா இயக்கியுள்ள இந்தப் படத்தில் ஹர்பஜன் சிங், சதீஸ், லாஸ்லியா, அர்ஜுன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். டி.எம்.உதயகுமார் இசையமைத்துள்ளார்.

தணிக்கையில் ஃப்ரண்ட்ஷிப் படத்துக்கு யு/ஏ சான்றிதழ் கிடைத்துள்ளது. செப்டம்பர் 17 அன்று திரையரங்குகளில் வெளியாகவுள்ள ஃப்ரண்ட்ஷிப்படத்தின் டிரெய்லர் இன்று வெளியாகியுள்ளது.தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் படத்தின் டிரெய்லரை வெளியிட்ட இயக்குநர் வெங்கட் பிரபு படக்குழுவினருக்கு வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.

From around the web