இது போலி கணக்கு. இந்த கணக்கை ரசிகர்கள் யாரும் பின் தொடர வேண்டாம்

 
Yogi-Babu

நடிகர் யோகிபாபு பெயரில் ட்விட்டரில் போலி கணக்கு உருவாகியுள்ளது.

சமூக வலைத்தளத்தில் நடிகர்கள் பெயரில் போலி கணக்கு தொடங்கி மோசடி செய்யும் போக்கு தொடர்கிறது. தமிழ் திரையுலகில் முன்னணி நகைச்சுவை நடிகராக இருக்கும் யோகிபாபு பெயரில் ஏற்கனவே மர்ம நபர்கள் வலைத்தளத்தில் போலி கணக்கு தொடங்கி அரசியல் தலைவர்களை கேலி செய்வதுபோன்று பதிவுகளை வெளியிட்டனர்.

இதனால் அதிர்ச்சியான யோகிபாபு நான் அவ்வாறு செய்யவில்லை. எனது பெயரில் ட்விட்டரில் போலி கணக்குகள் வைத்து இதுபோன்ற தவறான தகவலை வெளியிடுகிறார்கள் என்று கூறியிருந்தார்.

இந்நிலையில் மீண்டும் யோகிபாபு பெயரில் ட்விட்டரில் போலி கணக்கு உருவாகி உள்ளது. அதில் யோகிபாபுவின் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்கள். சர்ச்சை கருத்துக்களும் பதிவிடப்படுகின்றன. இந்த போலி கணக்கை உண்மை என்று நம்பி ஆயிரக்கணக்கான ரசிகர்கள் பின் தொடர்கிறார்கள்.

இதையடுத்து தற்போது யோகிபாபு அந்த போலி கணக்கை தனது அதிகாரபூர்வமான ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து “இது போலி கணக்கு. இந்த கணக்கை ரசிகர்கள் யாரும் பின் தொடர வேண்டாம்” என்று எச்சரித்துள்ளார்.

From around the web