நாளை வெளியாகிறது வலிமை படத்தின் டிரெய்லர்?

 
Valimai

அஜித் நடித்துள்ள வலிமை படத்தில் டிரெய்லர் நாளை வெளியாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

வலிமை படம் வெளியாக இன்னும் சில தினங்களே உள்ள நிலையில், அடுத்தடுத்து போஸ்டர்கள் உள்ளிட்டவை வெளியாகி ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.

நடிகர் அஜித், ஹீமா குரோஷி உள்ளிட்டவர்கள் லீட் கதாபாத்திரங்களில் நடித்து பொங்கலையொட்டி வெளியாக உள்ள படம் வலிமை. இரண்டு ஆண்டுகளுக்கு பின்பு அஜித் இந்தப் படத்தில் நடித்துள்ளார். முன்னதாக எச் வினோத் இயக்கத்தில் நேர்கொண்ட பார்வை படத்தில் நடித்திருந்தார்.

இந்தப் படத்தை போனி கபூர் தயாரித்திருந்த நிலையில், தற்போது மீண்டும் அஜித் -வினோத் -போனிகபூர் வலிமை படத்தில் இணைந்துள்ளனர். வலிமை படத்திற்கு ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

படத்தின் பாடல்கள், டீசர் உள்ளிட்டவை வெளியாகி சமூக வலைதளங்களில் மிகுந்த பரபரப்பிற்கு உள்ளானது. குறிப்பாக டீசர் மிகுந்த வரவேற்பை பெற்றது. வலிமை படத்தின் டிரெய்லர் நாளை வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது.  இதனால் #ValimaiTrailer என்ற ஹேஷ்டேக் ட்ரெண்ட் செய்து வருகின்றனர் ரசிகர்கள்.

From around the web