வடையில் பிளாஸ்டிக்... அது என்ன தொண்டையில் சிக்கி கொண்டது; நடிகை பரபரப்பு புகார்

 
Shambhavy-Gurumoorthy

ஆன்லைன் மூலம் வாங்கிய வடையில் பிளாஸ்டிக் இருந்தது அது என் தொண்டயில் சிக்கி கொண்டது என நடிகை ஒருவர் புகார் கூறியுள்ளார்.

சன் டிவியில் ஒளிபரப்பான கண்மணி தொடரில் முக்கியமான வேடத்தில் நடித்திருந்தவர் சாம்பவி. சில காரணங்களால் அந்த தொடர் பாதியில் நின்றது. தற்போது இவர் தெலுங்கு தொடர் ஒன்றில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அதிர்ச்சி தகவல் ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில், ‘சென்னையில் உள்ள தனியார் உணவகத்தில் ஆன்லைன் டெலிவரி மூலம் உணவு வாங்கி சாப்பிட்டதாகவும், வடையில் பிளாஸ்டிக் இருந்ததாகவும்’ குறிப்பிட்டுள்ளார்.

மேலும் அதனை கவனிக்காமல் உண்டதால் பிளாஸ்டிக் அவரது தொண்டையில் சிக்கிக்கொண்டதாகவும் மிகவும் சிரமப்பட்டு அதனை வெளியில் எடுத்ததாகவும் தெரிவித்துள்ளார். மேலும் உணவகங்களில் உணவு வாங்கி சாப்பிடும்போது கவனமாக இருங்கள் எனவும் எச்சரித்துள்ளார்.

A post shared by Shambhavy Gurumoorthy (@shambhavy_gurumoorthy_official)

From around the web