இயக்குநர் மணிரத்னத்தின் ‘நவரசா’ படத்தின் டீசர் வெளியீடு!

 
Navarasa

இயக்குநர் மணிரத்னத்தின் ‘நவரசா’ படத்தின் டீசர் வெளியாகி உள்ளது.

தமிழ் திரையுலகின் பிரபல நடிகர்களும் இயக்குநர்களும் ஒன்றிணைந்து ‘நவரசா’ என்கிற படத்தை உருவாக்கியுள்ளார்கள். பிரபல இயக்குநர் மணிரத்னமும் ஜெயேந்திராவும் தயாரித்துள்ள இப்படத்தை 9 இயக்குநர்கள் இயக்கியுள்ளார்கள்.

ஒன்பது உணர்வுகளையும், 9 கதைகளையும் கொண்ட இப்படத்தை பிரியதர்ஷன், கெளதம் மேனன், கார்த்திக் சுப்புராஜ், கார்த்திக் நரேன், ரதிந்திரன், பிஜாய் நம்பியார். வசந்த் சாய், சர்ஜுன் கே.எம்., அரவிந்த்சாமி ஆகியோர் இயக்கியுள்ளார்கள்.

இந்தப் படத்தில் சூர்யா, விஜய் சேதுபதி, பிரகாஷ் ராஜ், சித்தார்த், யோகி பாபு, அரவிந்த் சாமி, பிரசன்னா, ரேவதி, பார்வதி, ரித்விகா உள்ளிட்ட பிரபல நடிகர், நடிகைகள் நடித்துள்ளார்கள்.

ஏ.ஆர். ரஹ்மான், இமான், ஜிப்ரான், கோவிந்த் வசந்தா போன்ற பிரபல இசையமைப்பாளர்களும் சந்தோஷ் சிவன் உள்ளிட்ட பிரபல ஒளிப்பதிவாளர்களும் இந்தப் படத்தில் பணியாற்றியுள்ளார்கள்.

நவரசா படத்தைத் தயாரித்து அதிலிருந்து கிடைக்கும் வருமானத்திலிருந்து ரூ.10 கோடியை பெப்சி தொழிலாளர்களுக்கு இயக்குநர் மணிரத்னம் வழங்குகிறார். பெப்சி திரைப்பட உறுப்பினர்கள் 12 ஆயிரம் பேருக்கு வங்கி மூலமாக மாதம் ரூ.1,500 வீதம் 6 மாதங்களுக்குக் கொடுக்கிறார்கள்.

இந்தப் படம் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் ஆகஸ்ட் 6-ம் தேதி அன்று வெளியாவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இத்துடன் டீசரும் வெளியாகியுள்ளது.

From around the web