டார்சன் பட நடிகர் விமானம் விபத்தில் பலி!!

 
Tarzan-Joelara

அமெரிக்காவில் சிறிய ரக விமானம் ஏரியில் விழுந்து மூழ்கியதில் ஹாலிவுட் நடிகர் உள்ளிட்ட 7 பேர் உயிர் இழந்தனர்.

அமெரிக்காவின் டென்னசி மாகணத்தில் ரதர்போர்ட் நகரில் உள்ள விமான நிலையத்தில் இருந்து சிறிய ரக விமானம் ஒன்று நேற்று முன்தினம் இரவு பாம்பீச் விமான நிலையத்திற்கு புறப்பட்டு சென்றது. அதில் விமானி உட்பட 7 பேர் பயணித்தனர். விமானம் புறப்பட்ட சிறிது நேரத்தில் கட்டுப்பாட்டை இழந்து பெர்சி பிரிட்ஸ் என்ற ஏரியில் விழுந்து மூழ்கிவிட்டது.

தகவல் அறிந்து விரைந்து வந்த  ரதர்போர்ட் மீட்பு படையினர் தீவிர தேடுதல் பணியில் ஈடுபட்டனர். தொடர்ந்து பல மணி நேர தேடுதலுக்கு பிறகு உடல் ஒன்று மீட்கப்பட்டது. விமானத்தில் பயணித்த மற்ற 6 பேரின் நிலை என்னவென்று தெரியவில்லை.

அவர்கள் அனைவரும் ஏரியில் மூழ்கி உயிரிழந்திருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. இதனிடையியே மூழ்கிய விமானத்தில் பிரபலமான டார்சன் படத்தில் நடித்த ஜோ லாராவும் பயணித்தது உறுதி செய்யப்பட்டிருப்பதால் அவரும் விபத்தில் பலியாகி இருக்கலாம் என்று தெரிகிறது. பலியானவ்சர்களில் ஜோ லாராவின் மனைவி க்வென் லாராவும்  ஒருவர்.  

மேலும் ஜெனிபர் ஜே. மார்ட்டின், டேவிட் எல். மார்ட்டின், ஜெசிகா வால்டர்ஸ், ஜொனாதன் வால்டர்ஸ், மற்றும் பிராண்டன் ஹன்னா, இவர்கள் அனைவரும் உள்ளூர்வாசிகள் ஆவார்கள்.

விமான விபத்திற்கான காரணம் தெரியாத நிலையில் மூழ்கிய விமானத்தின் பாகங்களையும், எஞ்சிய உடல்களையும் மீட்புப்படையினர் தேடி வருகின்றனர். இந்த விபத்து தொடர்பாக விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

From around the web