முதல்வர் கொரோனா நிவாரண நிதிக்கு ரூ.10 லட்சம் வழங்கிய சூரி..!

 
Udhay-Soori

முதல்வரின் கொரோனா தடுப்புப் பணிகளுக்காக நடிகர் சூரி உதயநிதி ஸ்டாலினை சந்தித்து ரூ.10 லட்சம் நிதியுதவி அளித்திருக்கிறார்.

தமிழ்நாட்டில் கொரோனா 2-வது அலை காரணமாக தொற்று பரவல் அதிகரிப்பால் கடும் மருத்துவ நெருக்கடியையும், நிதி நெருக்கடியையும் அரசு சந்தித்து வருகிறது. கொரோனா நோய்த் தொற்றை எதிர்கொள்வதற்காக தாராளமாக நிதி அளிக்கலாம் என்று கொடையாளா்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்திருந்தார்.

இதையடுத்து தமிழ்நாடு அரசின் கொரோனா தடுப்பு பணிகளுக்காக பலரும் தங்களால் இயன்ற நிதி வரை கோடீஸ்வரர்கள், பெரும் நிறுவனங்கள், அரசியல், சினிமா, வெளிநாடுவாழ் தமிழர்கள், ஆசிரியர் அமைப்பினர், கடைநிலை ஊழியர்கள், குழந்தைகள் என பலதரப்பட்டவர்களும் நிதி அளித்து வருகின்றனர்.

இந்நிலையில், திமுக இளைஞர் அணி செயலாளரும், சேப்பாக்கம் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலினை சந்தித்த நடிகர் சூரி ரூ.10 லட்சம் நிதியுதவி வழங்கினார். அதனுடன், தன் மகள் வெண்ணிலா - மகன் சர்வான் சார்பில் ரூ.25 ஆயிரத்துக்கான ரொக்கத்தையும் கொரோனா தடுப்பு பணிக்காக முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு வழங்கினார்

From around the web