சிவகார்த்திகேயனுக்கு கை கொடுக்கும் சன் பிக்சர்ஸ்... 2 ஆண்டுகளில் 5 படங்கள்... சம்பளம் எவ்வளவு?

 
Sivakarthikeyan

நடிகர் சிவகார்த்திகேயன் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் அடுத்தடுத்து 5 படங்களில் கமிட்டாகியுள்ளதாக தகவல் பரவி வருகிறது.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக உயர்ந்து வருபவர் சிவகார்த்திகேயன். டிவி நிகழ்ச்சித் தொகுப்பாளராக மக்கள் மனங்களைக் கவர்ந்த சிவகார்த்திகேயன் அந்த புகழ் வெளிச்சத்தை மிகச்சரியாகப் பயன்படுத்தி சினிமாவுக்குள் நுழைந்தார்.

பாண்டிராஜ் இயக்கத்தில் ‘மெரினா’ படம் மூலம் ஹீரோவாக அறிமுகமானவர், இதுவரை 14 படங்களில் நடித்திருக்கிறார். பல வெற்றிப் படங்களை கொடுத்துள்ள சிவகார்த்திகேயன், தற்போது டாக்டர், அயலான் ஆகிய இரண்டு படங்களில் நடித்துள்ளார்.

இதில் டாக்டர் படம் மார்ச் மாதமே ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல், கொரோனா அச்சுறுத்தல் மற்றும் ஊரடங்கு காரணமாக ரிலீஸ் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் சிவகார்த்திகேயன் நடிக்கும் டான் படத்தின் அறிவிப்பு அண்மையில் வெளியானது. இந்தப் படத்தை லைகா நிறுவனம் மற்றும் சிவகார்த்திகேயன் புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் இணைந்து தயாரிக்கிறது.

இந்தப் படத்தை அட்லியிடம் உதவி இயக்குநராகப் பணிபுரிந்த சிபி சக்ரவர்த்தி இயக்குகிறார். இந்தப் படத்தில் விஜய் டிவி பிரபலங்கள் ஷிவாங்கி, புகழ் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். இந்நிலையில் சிவகார்த்திகேயன் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் அடுத்தடுத்து 5 படங்களில் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதாவது, அடுத்த 2 ஆண்டுகளில் சன் பிக்சர்ஸ் நிறுவனத்திற்காக 5 படங்களில் சிவகார்த்திகேயன் நடிக்க உள்ளதாகவும், இதற்காக மொத்தமாய் ரூ.75 கோடி சம்பளம் பேசப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.தற்போதைய கடன் சூழலில் இருந்துவெளிவர இது ஒரு நல்ல டீல் என்பதால் சிவகார்த்திகேயன் இதற்கு உடனடியாக ஒப்புதம் தெரிவித்திருக்கிறார்.

From around the web