பிரபல நடிகை வித்யுலேகாவுக்கு திடீர் திருமணம்! திருமண கொண்டாட்டத்தில் செல்வராகவன் !

 
Vidyullekha

பிரபல நடிகை வித்யுலேகா சஞ்சய் என்பவரை திருமணம் செய்துக் கொண்டார். அவர்களது திருமண புகைப்படங்கள் இணையதளத்தில் வைரலாகி வருகின்றன.

தமிழில் திரைப்படங்களில் காமெடி கதாபாத்திரங்களில் நடித்து பிரபலமானவர் வித்யுலேகா. மூத்த நடிகர் மோகன் ராமனின் மகளான இவர், கெளதம் மேனன் இயக்கத்தில், ஜீவா - சமந்தா நடிப்பில் வெளியான ‘நீதானே என் பொன் வசந்தம்’ படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார்.

இதையடுத்து, 'தீயா வேலை செய்யணும் குமாரு', 'மாலினி 22 பாளையங்கோட்டை', 'வீரம்', 'ஜில்லா', 'காக்கிச் சட்டை', 'புலி', 'வேதாளம்', 'பாகமதி' என பல படங்களில் நடித்துள்ளார்.

Vidyullekha

கொழுகொழுவென தோற்றமும், காமெடி கலாட்டாவும் ரசிகர்களிடையே வித்யூலேகாவை பிரபலமாக்கியது. இதையடுத்து அதிக உடல் பருமனுடன் இருந்த அவர், அதிரடியாக உடல் எடையை குறைந்து ஸ்லிம்மான உடல் தோற்றத்தில் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தினார். தற்போது தமிழ் மற்றும் தெலுங்கு திரைப்படங்களில் பிசியாக நடித்து வருகிறார்.

Vidyullekha

கடந்த ஆண்டு கொரானா நேரத்தில் பிட்னஸ் & நியூட்ரிசன் நிபுணர் சஞ்சய் என்பவருடன் வித்யூலேகாவுக்கு திருமண நிச்சயம் நடைபெற்றது. டும்ப உறுப்பினர்கள் மட்டும் அதில் கலந்து கொண்டனர்.

வருங்கால கணவர் சஞ்சய் உடன் வித்யூலேகா எடுத்துக் கொண்ட நிச்சயதார்த்த புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஷேர் செய்து ரசிகர்கள் மற்றும் பிரபலங்களின் வாழ்த்துக்களை பெற்றார்.

Vidyullekha

இந்நிலையில் வித்யூலேகா ராமனுக்கும் சஞ்சய்க்கும் திருமணம் நடந்து முடிந்துள்ளது. கொரோனா காலக்கட்டம் என்பதால் அவர்களது திருமணம் எளிமையாக நடந்ததாக தெரிகிறது. அவருக்கு பலரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

From around the web