‘டான்’ படத்தின் படப்பிடிப்பை மீண்டும் தொடங்கும் சிவகார்த்திகேயன்..!

 
DON

சிவகார்த்திகேயன் நடிக்கும் ‘டான்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு மீண்டும் தொடங்கவுள்ளது.

அட்லியிடம் உதவி இயக்குநராகப் பணிபுரிந்த சிபி சக்ரவர்த்தி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் ‘டான்’ திரைப்படம் உருவாகிவருகிறது. இந்தப் படத்தை லைகா நிறுவனம் மற்றும் சிவகார்த்திகேயன் புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் இணைந்து தயாரிக்கிறது.

இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக பிரியங்கா மோகன் நடிக்கிறார். கல்லூரி கதைக்களத்தில், முழுக்க முழுக்க காமெடி படமாக உருவாகும் இப்படத்தில் சிவகார்த்திகேயன் மற்றும் சூரி கல்லூரி மாணவர்களாக நடித்துவருவதாகக் கூறப்படுகிறது. இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.

இந்நிலையில், ‘டான்’ திரைப்படத்தின் படப்பிடிப்பும் விரைவில் சென்னையில் துவங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஏற்கனவே கடந்த பிப்ரவரி மாதம் டான் திரைப்படத்திற்கான பூஜை போடப்பட்டு, முதற்கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்தது. அதனை தொடர்ந்து ஏற்பட்ட கொரோனா அச்சுறுத்தல் காரணமாக படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டது.

From around the web