சிம்புவின் ‘மாநாடு’ பட ரிலீஸ் திடீர் ஒத்திவைப்பு.. ரசிகர்கள் அதிர்ச்சி!

 
Maanaadu

நாளை வெளியாக இருந்த நடிகர் சிம்புவின் ‘மாநாடு’ பட ரிலீஸ் தள்ளிவைக்கப்பட்டுள்ளதாக தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி ட்விட்டரில் அறிவித்துள்ளார்.

வெங்கட் பிரபு இயக்கத்தில் சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘மாநாடு’. இந்தப் படத்தில் சிம்பு கதாநாயகனாக நடித்துள்ளார். மேலும் கல்யாணி பிரியதர்ஷன், பாரதிராஜா, இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர், எஸ்.ஜே.சூர்யா, ஒய்.ஜி.மகேந்திரன், டேனியல் பாலாஜி, மனோஜ், பிரேம்ஜி, உதயா, அரவிந்த் ஆகாஷ், படவா கோபி, அஞ்சனா கீர்த்தி மற்றும் பலர் நடித்துள்ளனர்.

இந்தப்படம் முதலில் தீபாவளிக்கு வெளியாவதாக இருந்தது. ஆனால், சில காரணங்களால் நவம்பர் 25-ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. இதனால், சிம்பு ரசிகர்கள் உற்சாகம் அடைந்தனர்.

இந்நிலையில், மாநாடு படத்தின் ரிலீஸ் மீண்டும் தள்ளிவைக்கப்பட்டுள்ளது. படத்தின் தயாரிப்பாளரான சுரேஷ் காமாட்சி இது குறித்து தனது ட்விட்டரில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது, “நிறைய கனவுகளோடு படைக்கப்பட்ட ஓர் படைப்பு. இதின் பிரசவத்தை எதிர்நோக்கிக் காத்திருந்திருந்தேன் தவிர்க்க இயவாத காரணங்களால் மாநாடு வெளியீடு தள்ளி வைக்கப்படுகிறது என்பதை மிகுந்த வலியோடு தெரிவித்துக்கொள்கிறேன்.  வெளியாகும் தேதி பின்னர் அறிவிக்கிறேன்ஏற்பட்ட சிரமங்களுக்கு வருந்துகிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.

From around the web