’ரெட்டச்சுழி’, ஆன் தேவதை பட இயக்குனர் தாமிரா காலமானார்

 
’ரெட்டச்சுழி’, ஆன் தேவதை பட இயக்குனர் தாமிரா காலமானார்

தமிழ் திரைப்பட இயக்குனர் தாமிரா கொரோனா தொற்று காரணமாக இன்று காலமானார்.இயக்குனர் தாமிரா 2010 ஆம் ஆண்டு பிரபல தமிழ் இயக்குனர்களான கே.பாலசந்தர் மற்றும் பாரதிராஜா இருவரையும் இணைத்து நடிக்க வைத்த ஒரே இயக்குநர் தாமிரா தான். ரெட்டச்சுழி படத்தில் இருவரையும் இணைத்து நடிக்க வைத்த பெருமைக்குரியவர்.

நெல்லை மாவட்டம் மூலைக்கரைப்பட்டியில் 1977ஆம் ஆண்டு ஜனவரி 1ஆம் தேதி தாமிரா பிறந்தார். இவரது இயற்பெயர் தாவுத். மதுரை பல்கலைக்கழகத்தில் ஜர்னலிசம் படித்த தாமிரா, பொம்மை என்ற திரைப்பட இதழில் கட்டுரைகள் எழுதி வந்தார்.

மேலும் 2018 ஆம் ஆண்டு சமுத்திரகனி, ரம்யா பாண்டியன் ஆகியோர் நடித்த ஆண் தேவதை என்ற படத்தையும் இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் கொரோனா காரணமாக ஒரு வாரமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இன்று காலை அசோக் பில்லர் அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் மாயா மருத்துவமனையில் உயிரிழந்தார்.

From around the web