பிரபுதேவா நடிக்கும் ‘தேள்’ வெளியீட்டுத் தேதி அறிவிப்பு

 
Theal

பிரபுதேவா நடிக்கும் ‘தேள்’ படத்தின் வெளியீட்டுத் தேதியைப் படக்குழு அறிவித்துள்ளது.

‘தூத்துக்குடி’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகனாக அறிமுகமானவர் ஹரிகுமார். அதனைத் தொடர்ந்து ‘திருத்தம்’, ‘மதுரை சம்பவம்’, ‘போடிநாயக்கனூர் கணேசன்’ உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.

தற்போது ஸ்டுடியோ க்ரீன் ஞானவேல்ராஜா தயாரிக்கும் ஒரு படத்தை இயக்கி முடித்துள்ளார். ‘தேள்’ என்று தலைப்பிடப்பட்டுள்ள இப்படத்தில் பிரபுதேவா நாயகனாக நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக சம்யுக்தா ஹெக்டே நடித்துள்ளார். இப்படத்துக்கு சி.சத்யா இசையமைத்துள்ளார்.

இந்நிலையில் இப்படத்தின் வெளியீட்டுத் தேதியைப் படக்குழு அறிவித்துள்ளது. இதற்காக ஒரு பிரத்யேக போஸ்டரையும் படக்குழு வெளியிட்டுள்ளது. அதில் இப்படம் வரும் டிசம்பர் 10 அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகவுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

தற்போது ஏ.சி.முகில் இயக்கத்தில் பிரபுதேவா நடித்திருக்கும் ‘பொன் மாணிக்கவேல்’ திரைப்படம் நாளை (நவ.19) ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது. இது தவிர்த்து 'யங் மங் சங்', 'ஊமை விழிகள்', 'பஹீரா' உள்ளிட்ட படங்கள் படப்பிடிப்பு முடிந்து வெளியீட்டுக்குத் தயாராகவுள்ளன.

From around the web