அஜித்தின் ‘வலிமை’ படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு..!

 
Valimai

அஜித் நடித்துள்ள ‘வலிமை’ படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவாகியுள்ள படம் வலிமை. போனி கபூர் தயாரித்துள்ள இப்படத்தில் ஹூமா குரேஷி, கார்த்திகேயா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இந்தப் படத்துக்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்க, நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்துள்ளார்.

இந்தப் படத்தின் ஃப்ர்ஸ்ட் லுக் போஸ்டர், 2 பாடல்கள் மற்றும் படத்தின் மேக்கிங் வீடியோ ஏற்கனவே வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்த நிலையில் நேற்று இப்படத்தின் டிரெய்லர் வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலானது.

‘வலிமை’ படம் பொங்கலுக்கு வெளியாகும் என்று ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், இன்று படத்தின் ரிலீஸ் தேதி குறித்து படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிட்டுள்ளது.


அந்த அறிவிப்பில் ‘வலிமை’ திரைப்படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 2022-ம் ஆண்டு ஜனவரி மாதம் 13-ந் தேதி வியாழக்கிழமை வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

From around the web