நடிகர் விஷாலின் ‘வீரமே வாகை சூடும்’ படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு

 
VeeramaeVaagaiSoodum

நடிகர் விஷாலின் ‘வீரமே வாகை சூடும்’ படத்தின் ரீலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

‘எனிமி’ படத்தை தொடர்ந்து விஷால் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘வீரமே வாகை சூடும்’. இப்படத்தை அறிமுக இயக்குனர் து.ப.சரவணன் இயக்கி உள்ளார். இப்படத்தில் டிம்பிள் ஹயாதி, யோகி பாபு, மாரிமுத்து, துளசி, கவிதா பாரதி, மறைந்த ஆர்.என்.ஆர்.மனோகர், பாபுராஜ், பில்லி முரளி, ரவீனா, கே.எஸ்.ஜி.வெங்கடேஷ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

விஷால் ஃபிலிம் பேக்டரி தயாரித்துள்ள இப்படத்துக்கு யுவன் இசையமைத்து வருகிறார். கவின் ராஜ் ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்தப் படத்தின் பெரும்பாலான காட்சிகளை ஐதராபாத்திலும் சில காட்சிகளை சென்னையிலும் படமாக்கியுள்ளது.

இந்நிலையில் இந்த படத்தின் ரிலீஸ் தேதி வெளியாகியிருக்கிறது. அதன்படி ‘வீரமே வாகை சூடும்’ படம் குடியரசு தினத்தை முன்னிட்டு 2022 ஜனவரி 26-ம் தேதி வெளியாகும் என்று படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.

From around the web