சிம்புவின் ‘மாநாடு’ படத்தின் பிரீ-ரிலீஸ் டிரெய்லர் வெளியீடு

 
Maanaadu-pre-trailer

சிம்பு நடிப்பில் உருவாகியுள்ள ‘மாநாடு’ படத்தின் பிரீ-ரிலீஸ் டிரெய்லர் வெளியாகி உள்ளது.

வெங்கட் பிரபு இயக்கத்தில் சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘மாநாடு’. இந்தப் படத்தில் சிம்பு கதாநாயகனாக நடித்துள்ளார். மேலும் கல்யாணி பிரியதர்ஷன், பாரதிராஜா, இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர், எஸ்.ஜே.சூர்யா, ஒய்.ஜி.மகேந்திரன், டேனியல் பாலாஜி, மனோஜ், பிரேம்ஜி, உதயா, அரவிந்த் ஆகாஷ், படவா கோபி, அஞ்சனா கீர்த்தி மற்றும் பலர் நடித்துள்ளனர்.

தீபாவளிக்கு வெளியாவதாக இருந்த இந்தத் திரைப்படமானது பின்னர் நவம்பர் 25-ம் தேதி வெளியாகும் என படக்குழுவினரால் அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் இந்தப் படத்தின் பிரீ ரிலீஸ் டிரெய்லர் வெளியாகி உள்ளது. இதை தனது ட்விட்டர் பக்கத்தில் நடிகர் சிம்பு வெளியிட்டுள்ளார்.


 

From around the web