மீண்டும் விஜய்யுடன் இணையும் பிரபுதேவா

 
Thalapathy-66

‘தளபதி 66’ படத்தில் இரண்டு பாடல்களுக்கு பிரபுதேவா நடனப் பயிற்சி அளிக்கவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

‘பீஸ்ட்’ படத்தைத் தொடர்ந்து தில் ராஜு தயாரிக்கவுள்ள புதிய படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் விஜய். ‘தோழா’, ‘மஹரிஷி’ உள்ளிட்ட படங்களின் இயக்குநர் வம்சி இந்தப் படத்தை இயக்கவுள்ளார்.

இது விஜய் நடிப்பில் உருவாகும் 66-வது படம் என்பதால் ‘தளபதி 66’ என்று அழைக்கப்படுகிறது. தமிழ் மற்றும் தெலுங்கில் ஒரே நேரத்தில் இந்தப் படம் உருவாகிறது. இப்படத்துக்கு தமன் இசையமைக்கிறார்.

இந்நிலையில் ‘தளபதி 66’ படத்தில் இரண்டு பாடல்களுக்கு பிரபுதேவா நடனப் பயிற்சி அளிக்கவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இதற்காக பிரபுதேவாவிடம் விஜய் தனிப்பட்ட முறையில் கேட்டுக்கொண்டதாகவும் கூறப்படுகிறது.

ஏற்கெனவே பிரபுதேவா இயக்கிய ‘போக்கிரி’, ‘வில்லு’ ஆகிய படங்களில் விஜய் நாயகனாக நடித்திருந்தார். அந்த 2 படங்களிலுமே ஒரு பாடலில் சிறிது நேரம் இருவரும் இணைந்து நடனமாடியிருப்பார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

From around the web