பிரபல பாலிவுட் நடிகை தீபிகா படுகோனே கொரோனா தொற்று உறுதி!

 
Deepika-Padukone

பிரபல பாலிவுட் நடிகை தீபிகா படுகோனே கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார்.

இந்தியாவில் கொரோனா 2-வது அலை வேகமெடுத்துள்ளது. நாடு முழுவதும் கடந்த சில நாட்களாக 3 லட்சத்துக்கும் அதிகமானோர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையிலும் கொரோனா தொற்று பரவல் மீண்டும் வேகமெடுக்கத் தொடங்கியுள்ளது சற்று கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. பொதுமக்கள், அரசியல் தலைவர்கள், திரைபிரபலங்கள் உள்பட அனைத்து தரப்பினரும் வைரஸ் தாக்குதலுக்கு உள்ளாகி வருகின்றனர்.

பாலிவுட்டின் முன்னணி நடிகை தீபிகாபடுகோனே கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார். அவர் தந்தையான முன்னாள் பேட்மிண்டன் வீரர் பிரகாஷ் படுகோனேக்குத் தொற்று ஏற்பட்டு கடந்தவாரம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தீபிகாவின் தாய் உஜ்ஜாலா, தங்கை அனிஷாவும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அவர்களும் சிகிச்சை பெற்று வந்த நிலையில் பெங்களூரில் குடும்பத்தினரை காண வந்த  தீபிகா படுகோனேக்கும் கொரோனா தொற்று பரவியது. இதையடுத்து அவர் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தமது உடல் நிலைபற்றி தீபிகா படுகோன் எந்தவித தகவல்களையும் வெளியிடவில்லை.

From around the web