நடிக்க வைப்பதாக ஆசை வார்த்தை கூறி இளம் பெண் பலாத்காரம்... தயாரிப்பாளரை கைது செய்த போலீசார்!!

 
Ashish-Bhavsar

‘வெப்’ தொடரில் நடிக்க வைப்பதாக ஆசை வார்த்தை கூறி இளம் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த தயாரிப்பாளரை போலீசார் கைது செய்துள்ளனர்.

மராட்டிய மாநிலம் மும்பையை சேர்ந்த திரைப்பட தயாரிப்பாளரான ஆஷிஷ் பவ்ஷர் (வயது 42) சில திரைப்படங்களையும், ‘வெப்’ தொடரையும் தயாரித்துள்ளார்.

இதற்கிடையில், ‘வெப்’ தொடரில் நடிக்க வைப்பதாக ஆசை வார்த்தை கூறி தன்னை பாலியல் பலாத்காரம் செய்துவிட்டதாக ஆஷிஷ் மீது கடந்த மார்ச் மாதம் 21 வயது நிரம்பிய இளம் பெண் மும்பை கோரிகன் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.

இந்த வழக்கில் ஆஷிஷ் பவ்ஷர் முன் ஜாமீன் பெற்றிருந்தார். இந்நிலையில், ஆஷிஷ் பவ்ஷரின் முன் ஜாமீனை நீதிமன்றம் ரத்து செய்து செய்தது.

இந்நிலையில், முன் ஜாமீன் ரத்து செய்யப்பட்டதை தொடர்ந்து இளம் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள தயாரிப்பாளர் ஆஷிஷ் பவ்ஷரை போலீசார் நேற்று கைது செய்தனர்.

கைது செய்யப்பட்டுள்ள ஆஷிஷ் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளார். இந்த வழக்கு தொடர்பாக ஆஷிஷ் பவ்ஷரிடம் விசாரணை நடத்த போலீசார் திட்டமிட்டுள்ளனர்.

From around the web