இரண்டே நாளில் ஒரு கோடி பார்வையாளர்கள்... மாஸ் காட்டும் வலிமை மோஷன் போஸ்டர்!!

 
Valimai

நடிகர் அஜித்தின் வலிமை படத்தின் மோஷன் போஸ்டர், இரண்டே நாட்களில் ஒரு கோடிக்கும் அதிகமான பார்வைகளை கடந்துள்ளது.

நேர்கொண்ட பார்வை படத்தை தொடர்ந்து நடிகர் அஜித் நடித்து வரும் படம் ‘வலிமை’. எச்.வினோத் இயக்கத்தில் உருவாகி வரும் இப்படத்தின் படப்பிடிப்பு ஐதராபாத்தில் நடைபெற்று வருகிறது. இதில் ஹியூமா குரேஷி, கார்த்திகேயா, பாவெல் நவகீதன், யோகி பாபு உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள்.

பின்னணி இசைக்கு பேர்போன யுவன் சங்கர் ராஜா இந்த படத்துக்கு இசையமைத்து வரும் நிலையில், நிரவ் ஷா இந்த படத்தின் ஒளிப்பதிவாளாராக பணியாற்றியுள்ளார்.

இந்த நிலையில் அஜித் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் வலிமை படத்தின்ஃபர்ஸ்ட் லுக்குடன் அதன் மோஷன் போஸ்டரையும் படக்குழு வெளியிட்டுள்ளது. இதனால் அஜித் ரசிகர்கள் மிகுந்த உற்சாகமடைந்துள்ளனர்.

இரண்டு நாட்களுக்கு முன் வெளியான இந்த மோஷன் போஸ்டரில் அஜித்தின் ஸ்டைலிஷ் லுக்கும், யுவன் சங்கர் ராஜாவின் பின்னணி இசையும் ரசிகர்களை ரசிக்க வைத்துள்ளது.

இதனிடையே, மோஷன் போஸ்டர் ஒரு கோடிக்கும் அதிகமான பார்வைகளை கடந்ததை ஒட்டி, அஜித் பைக்கில் அமர்ந்திருக்கும் புதிய போஸ்டர் ஒன்றை வலிமை படக்குழு வெளியிட்டுள்ளது.

From around the web