பிரபல நடிகை கங்கனா ரணாவத் மீதான வழக்கை ரத்து செய்ய மும்பை உயர்நீதிமன்றம் மறுப்பு

 
Kangana-Ranaut

பாடலாசிரியர் ஜாவித் அக்தர் தொடர்ந்த அவதூறு வழக்கை ரத்து செய்ய கோரி, நடிகை கங்கனா ரனாவத் தாக்கல் செய்த மனுவை மும்பை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
 
பிரபல பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் மறைவை அடுத்து நடிகை கங்கனா ரனாவத், பாலிவுட்  பிரபலங்கள் மீது பல பரபரப்பு புகார்களை கூறியிருந்தார்.

வாரிசு நடிகர், நடிகைகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பது, போதைப் பொருள் பயன்பாடு உள்பட பல  தகவல்களை கூறியிருந்தார். அதோடு கரண் ஜோகர் உள்பட முன்னணி டைரக்டர்கள் மீது புகார்களை தெரிவித்திருந்தார்.

பிரபல பாலிவுட் திரைப்பட பாடலாசிரியா் ஜாவித் அக்தர் குறித்தும் பேட்டி ஒன்றில், அவர் அவதூறு கருத்தை கூறியதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து கங்கனா மீது அந்தேரி மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஜாவித் அக்தர் மானநஷ்ட வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு தொடர்ந்து ரனாவத் மனுதாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. விசாரித்த நீதிமன்றம் கங்கனாவின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

From around the web