ஓடிடியில் வெளியாகும் மிர்ச்சி சிவாவின் ‘சுமோ’... படக்குழு அறிவிப்பு !

 
ஓடிடியில் வெளியாகும் மிர்ச்சி சிவாவின் ‘சுமோ’... படக்குழு அறிவிப்பு !

மிர்ச்சி சிவா நடித்த சுமோ திரைப்படம் நேரடியாக ஒடிடி தளத்தில் வெளியாகயுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

‘பிப்ரவரி 14’, ‘ஆயிரம் விளக்கு’ படங்களை இயக்கியவர் ஹோசிமின். நீண்ட ஆண்டுகள் கழித்து மிர்ச்சி சிவா, ப்ரியா ஆனந்த் ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள 'சுமோ' படத்தை இயக்கியுள்ளார்.

ஐசரி கணேஷ் தயாரித்துள்ள இந்தப்படத்திற்கு, மிர்ச்சி சிவா திரைக்கதை, வசனம் எழுதியுள்ளார். மேலும் ராஜூவ் மோகன் ஒளிப்பதிவு செய்ய, நிவாஷ் கே பிரசன்னா ஒளிப்பதிவு செய்துள்ளார். இதில், யோகி பாபு, விடிவி கணேஷ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

கொரோனா அச்சுறுத்தலால் பலமுறை வெளியீடு அறிவிக்கப்பட்டு, ஒத்திவைக்கப்பட்டு வந்தது. தற்போது கொரோனா 2-வது அலை அதிகரித்து வரும் சூழலில் ஓடிடி வெளியீட்டைத் தேர்வு செய்துள்ளது 'சுமோ' படக்குழு. இந்தப் படம் நேரடியாக அமேசான் ப்ரைம் ஓடிடியில் வெளியாகவுள்ளது. எப்போது வெளியீடு உள்ளிட்ட விவரங்களை புதிய ட்ரெய்லருடன் படக்குழு விரைவில் அறிவிக்கவுள்ளது.

இந்தோ-ஜப்பானிஸ் படமான ‘சுமோ’ சுமோக்களின் வாழ்க்கையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட முதல் இந்தியத் திரைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது. ஜப்பானில் 35 நாட்கள் படப்பிடிப்பு நடத்தப்பட்டுள்ளது.

From around the web