லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மகேஷ்பாபு..?

 
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மகேஷ்பாபு..?

நடிகர் மகேஷ்பாபுவை வைத்து தெலுங்கு படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்க இருப்பதாக தகவலெ வெளியாகியுள்ளது.

விஜய் நடித்த ‘மாஸ்டர்’ படத்தைத் தொடர்ந்து, கமல் நடிக்கவுள்ள ‘விக்ரம்’ படத்தை இயக்கவுள்ளார் லோகேஷ் கனகராஜ். ராஜ்கமல் நிறுவனம் மற்றும் டர்மரிக் மீடியா நிறுவனம் இணைந்து தயாரிக்கவுள்ள இந்தப் படத்துக்கு அனிருத் இசையமைக்கவுள்ளார்.

அந்த படத்தை இயக்கி முடித்த பின், மீண்டும் அவர் விஜய் நடிக்கும் படத்தை டைரக்டு செய்யப்போவதாக பேசப்படுகிறது.

இதற்கிடையில், தெலுங்கில் பிரமாண்டமான படங்களை தயாரித்து வரும் மைத்ரி மூவீஸ் என்ற பட நிறுவனம் லோகேஷ் கனகராஜை சந்தித்து தங்கள் நிறுவனத்துக்காக ஒரு தெலுங்கு படத்தை டைரக்டு செய்து தரும்படி, கேட்டுக் கொண்டிருக்கிறதாம். இதற்காக லோகேஷ் கனகராஜிடம் ஒரு பெரிய தொகையை அட்வான்ஸ் ஆக கொடுத்து இருக்கிறதாம். மேலும் பிரபாஸ், ராம் சரண் ஆகிய இருவரும் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிக்க தயாராக இருக்கிறார்கள்.

இப்போது விஜய் நடிக்கும் 66-வது படத்தை முடித்த பின், மகேஷ்பாபுவை வைத்து ஒரு தெலுங்கு படத்தை இயக்க இருப்பதாக கூறப் படுகிறது.

From around the web