உதயநிதி ஸ்டாலினுக்கு ஜோடியாகும் கீர்த்தி சுரேஷ்..!

 
Udhayanidhi-KeerthySuresh

உதயநிதி ஸ்டாலின் நடிக்க இருக்கும் புதிய படத்தில் அவருக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

உதயநிதி ஸ்டாலின் தற்போது ‘ஆர்டிகிள் 15’ இந்தி படத்தின் தமிழ் ரீமேக்கான ‘நெஞ்சுக்கு நீதி’ படத்தில் நடித்து வருகிறார். இதைத் தொடர்ந்து அவர் நடிக்கும் பெயரிடப்படாத படத்தின் முதல் கட்ட பணிகள் தொடங்கியுள்ளன. இந்தப் படத்தை ‘பரியேறும் பெருமாள்’, ‘கர்ணன்’ ஆகிய திரைப்படங்களை இயக்கிய இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்க இருக்கிறார்.

இந்த நிலையில் சமீபத்தில் வெளியான ‘புஷ்பா’ படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்திருந்த நடிகர் பகத் பாசில் உதயநிதியின் படத்திலும் வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்படத்திற்கு ஹீரோயினாக கீர்த்தி சுரேஷ்யை ஒப்பந்தம் செய்துள்ளனர்.

இப்படத்திற்கு ஏ .ஆர் .ரஹ்மான் இசையமைக்க ஒப்பந்தமாகி இருப்பதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன. எம்எல்ஏவான உதயநிதி அடுத்தபடியாக தீவிர அரசியலில் ஈடுபடப்போவதாக கூறப்படும் நிலையில் சினிமாவை குறைத்துவிட்டு முழுநேர அரசியலில் ஈடுபட எண்ணி உள்ளார்.

From around the web