கார்த்தி, அதிதி நடிக்கும் விருமன்..! பட பூஜையில் கலந்து கொண்ட பிரபல இயக்குனர்கள்!!

 
Viruman

2டி என்டர்டெயின்மெண்ட் தயாரிப்பில் முத்தையா இயக்கத்தில் கார்த்தி நடிக்கும் விருமன் படம் இன்று பூஜையுடன் தொடங்கியது.

தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குனராக உள்ள ஷங்கர் மகள் அதிதி கதாநாயகியானார். கார்த்தி ஜோடியாக விருமன் படத்தில் நடிக்க அவரை ஒப்பந்தம் செய்துள்ளனர். அதிதியின் கதாபாத்திரம் வீரம் கொண்ட கனமான கதாபாத்திரமாக இருக்கும் என்று படக்குழுவினர் தெரிவித்து உள்ளனர்.

சூர்யாவின் திரைப்பட தயாரிப்பு நிறுவனமான 2டி என்டர்டைன்மென்ட் சார்பாக, கார்த்தி 'கடைக்குட்டி சிங்கம்' படத்தில் நடித்திருந்தார். இந்த படத்தை இயக்குநர் பாண்டிராஜ் இயக்கியிருந்தார்.

Viruman

இதைத்தொடர்ந்த நடிகர் சூர்யா தயாரிப்பில் மீண்டும் அவரது சகோதரர் கார்த்தி நடிக்கும் படத்தை முத்தையா இயக்குகிறார். இவர் ஏற்கனவே கார்த்தி நடிப்பில் கொப்பன் படத்தை இயக்கியிருந்தார்.

இந்நிலையில் சூர்யா தயாரிப்பில் மீண்டும் கார்த்தி- முத்தையா இணையும் படத்திற்கு 'விருமன்' என தலைப்பு வைத்துள்ளனர். படத்தின் தலைப்போடு ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரையும் வெளியிட்டுள்ளார் நடிகர் சூர்யா. யுவன் இசையமைக்கிறார். ‘மாநகரம்’ படத்துக்கு ஒளிப்பதிவு செய்த எஸ்.கே.செல்வகுமார் இப்படத்தில் ஒளிப்பதிவாளராக பணியாற்றுகிறார்.

Viruman

நேற்று படத்தின் பெயர் மற்றும் விவரங்களை வெளியிட்டவர்கள் இன்று பூஜையுடன் படத்தை தொடங்கினர். இந்த நிகழ்வில் படத்தின் தயாரிப்பாளர் சூர்யா, நாயகன் கார்த்தி, இவர்களின் தந்தை சிவகுமார், நாயகி அதிதி, அவரது தந்தையும் இயக்குனருமான ஷங்கர், படத்தின் இயக்குனர் முத்தையா உள்பட படக்குழுவினர் கலந்து கொண்டனர். வரும் 18-ம் தேதி இப்படத்தின் படப்பிடிப்பு தேனியில் தொடங்கவுள்ளது.

எதிர்பாராத விருந்தாளியாக பாலாவும் இதில் கலந்து கொண்டார். பாலாவின் படத்தை சூர்யாவின் 2டி என்டர்டெயின்மெண்ட் தயாரிக்கிறது. அதர்வா நாயகனாக நடிக்கும் இந்தப் படத்தில் கீர்த்தி சுரேஷ் நாயகியாகவும், சூர்யா கௌரவ வேடத்திலும் நடிப்பதாக தகவல். பாலா விருமன் பூஜையில் கலந்து கொண்டதைப் பார்த்தால் அதிதிக்கும் தனது படத்தில் வாய்ப்பு தருவாரோ என சந்தேகம் எழுகிறது.

From around the web