வெற்றிமாறன் இயக்கத்தில் கமல்.. படத்தை உறுதி செய்த ஸ்ரீப்ரியா!

 
Vetrimaaran-Kamal

கமல் - வெற்றிமாறன் இணைந்து பணிபுரிய இருப்பதை ஸ்ரீப்ரியா அளித்துள்ள பேட்டியில் உறுதி செய்துள்ளார்.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல், விஜய் சேதுபதி, ஃபகத் பாசில் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி வரும் படம் 'விக்ரம்'. இதன் படப்பிடிப்பு புதுச்சேரில் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இதனைத் தொடர்ந்து சென்னையில் சில முக்கிய காட்சிகளைப்  படக்குழு படமாக்கவுள்ளது.

இந்த படத்துக்கு பிறகு அவர் நடிக்கும் புதிய படம் பற்றிய எதிர்பார்ப்பு நிலவியது. இந்த நிலையில் விக்ரம் படத்தை முடித்து விட்டு வெற்றிமாறன் இயக்கும் படத்தில் கமல்ஹாசன் நடிப்பதை நடிகை ஸ்ரீப்ரியா தற்போது உறுதிப்படுத்தி உள்ளார்.

பாபநாசம் 2-ம் பாகத்தில் நடிக்க கமல்ஹாசனுக்கு நேரம் இல்லை. விக்ரம் மற்றும் வெற்றிமாறன் இயக்கும் படங்களில் அவர் நடிக்க உள்ளார் என்று ஸ்ரீப்ரியா கூறியுள்ளார். சூர்யா நடிக்கும் வாடிவாசல் படத்தை வெற்றிமாறன் இயக்குகிறார். அந்த படத்தை முடித்து விட்டு கமல்ஹாசன் படத்தை இயக்க இருக்கிறார்.

கமல்ஹாசன் ஏற்கனவே நடித்து வந்த இந்தியன்-2 படம் வழக்கில் சிக்கியது. விரைவில் இதன் படப்பிடிப்பு தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

From around the web