பட்டாசு தான்! ஆனா சத்தம் கொஞ்சம் குறைவு!

 
rajini Annathe

அண்ணாத்த டைட்டில் பாடல் காலையில் கேட்டாச்சு. வரிகளில் கொஞ்சம் வறட்சி. இன்னும் அரசியல் ஹேங் ஓவர் இருக்கிறது, கொஞ்சம் தற்போதைய இமேஜுக்கு ஏற்ற மாதிரி மாற்றி இருக்கலாம்.

விடியல் வரிகள் மட்டும் அன்றே சொன்ன ரஜினி என்று ரசிகர்களில் ஒரு பிரிவினர் குதுகாலம் கொள்ள வாய்ப்பு இருக்கிறது.மற்ற படி படையப்பா , அருணாச்சலத்தில் வந்த அதே காட்சிகளை மீண்டும் சூப்பர் ஸ்டாரை செய்ய வைத்திருக்கிறார்கள்.

அந்த படங்களைக் கொண்டாடிய ரசிகர்கள் அதே மாதிரி அப்படியே எடுத்தால் கொண்டாடமலா போய் விடுவார்கள் என்ற சிவாவின் நம்பிக்கை காட்சிப்படுத்துதலில் தெரிகிறது. ரஜினிக்கான இமான் இசை கேட்கும் போது அனிருத்தைப் பாராட்டாமல் இருக்க முடியவில்லை. சரி இமான் மெலடி குத்து போட்டிருக்கிறார்.

எஸ்பிபி குரல் கேட்பதே மகிழ்ச்சி தான், மெலிதான வலி தெரிகிறது அந்த துள்ளல் குரலில். 

பட்டாசு தான் ஆனா சத்தம் கொஞ்சம் குறைவு.

- தேவ்

From around the web