என் வீட்டு வாசல்ல நடந்தது... அதிர்ச்சி விடியோவை வெளியிட்ட நடிகர் ஷாந்தனு!

 
Shanthnu

நடிகர் ஷாந்தனு தனது ட்விட்டர் பக்கத்தில் பதவிட்ட வீடியோ வைரலாகி வருகிறது.

சுதா கொங்கரா இயக்கத்தில் ஷாந்தனு நடித்த தங்கம் என்ற வெப் சீரியஸ்க்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. மேலும் அவரது நடிப்புக்கு பாராட்டுக்கள் குவிந்தது. இதனையடுத்து ராவண கோட்டம், முருங்கக்கா சிப்ஸ் உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார்.

விஜய்யுடன் இணைந்து ஷாந்தனு நடித்த மாஸ்டர் படம் அவருக்கு மக்கள் மத்தியில் நல்ல அடையாளத்தை ஏற்படுத்தியது. இந்த நிலையில் அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் விடியோ ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில் மரம் ஒன்று கார் மேல் விழுந்துள்ளது. இதில் அந்த கார் பலத்த சேதமடைந்துள்ளது.

இந்த விடியோவை பகிர்ந்து, இந்த சம்பவம் என் வீட்டு வாசலில் நடைபெற்றது. யாரும் அந்த காரில் இல்லை என்பது நிம்மதியாக இருக்கிறது. மழை மிகவும் மோசமாக இருக்கிறது. எல்லோரும் பாதுகாப்பாக இருங்கள் என்று குறிப்பிட்டுள்ளார்.

From around the web