திருமணம் முடிந்துவிட்டதா...? நடிகை சுருதிஹாசன் பதில்

 
Shruti-Hasan

திருமணம் முடிந்துவிட்டதா? நடிகை சுருதிஹாசன் சமூக வலைத்தளத்தில் ரசிகர்களின் கேள்விக்கு விளக்கம் அளித்தார்.

நடிகை சுருதிஹாசன் டெல்லியை சேர்ந்த சாந்தனு ஹசாரியா என்பவரை காதலித்து வருகிறார். இருவரும் நெருக்கமாக எடுத்துக்கொண்ட புகைப்படங்களையும் வலைத்தளத்தில் வெளியிட்டு வருகிறார்.

இந்நிலையில் சமூக வலைத்தளத்தில் ரசிகர்களுடன் சுருதிஹாசன் கலந்துரையாடினார். அப்போது ஒரு ரசிகர் உங்களுக்கு திருமணம் முடிந்துவிட்டதா? என்று கேள்வி எழுப்பினார். அதற்கு பதில் அளித்த சுருதிஹாசன் எனக்கு திருமணம் ஆகவில்லை என்றார்.

எப்போது திருமணம் செய்து கொள்வீர்கள்? என்று இன்னொரு ரசிகர் கேள்விக்கு அது எனக்கு தெரியாது என்றார். மேலும் சுருதிஹாசன் கூறும்போது, “குடும்பத்தினர் உள்பட அனைவரும் பாதுகாப்பாக இருப்பீர்கள் என்று நம்புகிறேன். எல்லோரிடமும் அன்பு காட்டுங்கள். எனக்கு தமிழ், தெலுங்கு, இந்தி, ஆங்கில மொழிகள் தெரியும். தமிழில் பேசவும் எழுதவும் மெதுவாக படிக்கவும் தெரியும். ஆனால் எனது அப்பா அளவுக்கு என்னால் தமிழில் பேச முடியாது.

ஏன் நீங்கள் ஒல்லியாக இருக்கிறீர்கள் என்று கேட்கிறார்கள். நான் ஒல்லியாக இல்லை. உடற்பயிற்சி செய்கிறேன். எனக்கு பிடித்த நிறம் கருப்பு, எனது தந்தை நடித்த படங்களில் மிகவும் பிடித்த படம் மகாநதி. அபூர்வ சகோதரர்கள். விருமாண்டி படங்களும் பிடித்தவை. எனது அடுத்த தமிழ் படம் லாபம். அது எப்போது ரிலீசாகும் என்று தெரியவில்லை” என்றார்.

From around the web