முத்துராமன் பேரன் என்று சொல்லிக் கொள்வதில் நான் பெருமைப்படுகிறேன் - நடிகர் கௌதம் கார்த்திக்

 
Gautam-Karthik

முத்துராமன் பேரன் என்று சொல்லிக் கொள்வதில் நான் பெருமைப்படுகிறேன் என்று நடிகர் கௌதம் கார்த்திக் தெரிவித்துள்ளார்.

தமிழ் திரையுலகில் 1960 மற்றும் 70-களில் 100-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து முன்னணி கதாநாயகனாக வலம் வந்த முத்துராமன் 1981-ல் தனது 52-வது வயதில் ஆயிரம் முத்தங்கள் என்ற படத்தின் படப்பிடிப்புக்காக ஊட்டி சென்றபோது மயங்கி விழுந்து இறந்து போனார்.

முத்துராமன் மகனான கார்த்திக், அலைகள் ஓய்வதில்லை படத்தில் அறிமுகமாகி முன்னணி நடிகராக உயர்ந்தார். தற்போது அவர் குணசித்திர வேடங்களில் நடித்து வருகிறார். கார்த்திக்கின் மகனும் முத்துராமனின் பேரனுமான கௌதம் கார்த்திக்கும் மணிரத்னத்தின் கடல் படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார்.

அதனைத் தொடர்ந்து என்னமோ ஏதோ, முத்துராமலிங்கம், ரங்கூன், இந்திரஜித், தேவராட்டம் உள்ளிட்ட படங்களில் நடித்து இருக்கிறார். இந்நிலையில் முத்துராமன் பிறந்த நாளையொட்டி கௌதம் கார்த்திக் இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ள உருக்கமான பதிவில், “உங்களை நான் பார்த்தது இல்லை. ஆனால் உங்களுடன் வாழ்ந்தவர்கள் உங்களைப்பற்றி சொல்வதை கேட்கும்போது மகிழ்ச்சியாக உள்ளது. அன்பு, கடின உழைப்பு, அதீத திறமை, அர்ப்பணிப்புடன் செயல்பட்ட உங்களுடைய பேரன் என்று சொல்லிக் கொள்வதில் நான் பெருமைப்படுகிறேன். உங்களை பெருமைப்படுத்தும் வகையில் நான் நடந்து கொள்வேன் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது. பிறந்தநாள் வாழ்த்துக்கள் தாத்தா” என்று கூறியுள்ளார்.

From around the web