பிச்சைகாரியாக இருக்கிறேன்... நான் இறந்துவிட்டால்..? பிரபல நடிகை கண்ணீர் பேட்டி

 
Vijayalakshmi

பிரபல திரைப்பட நடிகையான விஜயலட்சுமி நான் பிச்சைகாரியாக இருக்கிறேன், இறந்தால் கர்நாடகாவிலே சமாதி எழுப்பிங்கள் என்று பரபரப்பான பேட்டி தந்துள்ளார்.

கடந்த 2001-ம் ஆண்டு விஜய் நடிப்பில் வெளியான ப்ரண்ட்ஸ் படத்தின் மூலம் அறிமுகமானவர் விஜயலட்சுமி. அதன்பின் தமிழ், கன்னடம் என பல மொழிகளில் நடித்து பிரபலமான அவர், சில ஆண்டுகளிலே இருக்கும் இடம் தெரியாமல் போய்விட்டார்.

இதையடுத்து சமீபத்தில் உடல்நலக் குறைவு காரணமாக தான் அவதிப்படுவதாகவும், யாரேனும் பண உதவி செய்யுங்கள் என்று வீடியோ வெளியிட்டிருந்தார். இந்த வீடியோவைக் கண்ட திரைப்பிரபலங்கள் பலரும் அவருக்கு உதவினர்.

இதற்கிடையில் சீமான் தன்னை ஏமாற்றிவிட்டதாக கூறி வீடியோ வெளியிட்டார். அந்த வீடியோ இணையத்தில் அதிக அளவில் பகிரப்பட்டது. இது திரையுலகில் பெரிய அளவில் பேசப்பட்டது.

அதில், தனக்கு நியாயம் தேவை என்று தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் கோரிக்கை வைத்திருந்தார். அதேபோல இவர் வீட்டை காலி செய்ய சொல்லிவிட்டதாக கூறி மற்றொரு பிரச்சனை வெடித்தது. தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதாக இன்னொரு செய்தியும் வெடித்தது. இப்படி விஜயலட்சுமி குறித்த செய்திகள் அவ்வப்போது வெளியாகி கொண்டே இருக்கும் நிலையில், மீண்டும் ஒரு செய்தி பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

நடிகை விஜயலட்சுமி, கர்நாடக சினிமா வர்த்தக சபையில் செய்தியாளர்களை சந்தித்து பேட்டி ஒன்றை அளித்துள்ளார். என் அம்மா இறந்தவுடன் எனக்கு எதுவும் தோன்றவில்லை, பாமா, ஹரிஷ் போன்றோர் எனக்கு உதவி செய்தார்கள், கதறி அழுவதை தவிர எனக்கு வேறு எதுவுமே தெரியவில்லை.

நடிகர்கள் சிவராஜ்குமார், யஷ் ஆகியோரிடம் பேசி உள்ளேன். கர்நாடகாவில் நான் இன்னமும் பிச்சைக்காரி தான், எல்லாவற்றுக்கும் நான் பிச்சை தான் எடுத்து கொண்டிருக்கிறேன். எனக்கு என்று யாருமே இல்லை.

நான் அனாதையாகி விட்டேன். நான் இறந்தால் இந்த கர்நாடகாவிலேயே சமாதி எழுப்புங்கள் என்று கண்கலங்கிய நிலையில் பேசியுள்ளார்.   

From around the web