இதயம் நொறுங்கிவிட்டது… கோபம் வருது… எதுவும் செய்ய முடியாத நிலை... ராதிகா வேதனை!

 
இதயம் நொறுங்கிவிட்டது… கோபம் வருது… எதுவும் செய்ய முடியாத நிலை... ராதிகா வேதனை!

குஜராத் மருத்துவமனையில் கொரோனா பாதித்த சிறுவன் சாலையில் படுத்துக்கிடக்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி அனைவரின் கண்களையும் கலங்கவைத்துள்ளது.

நாடு முழுவதும் கொரோனாவின் 2-ம் அலை தற்போது ஏற்பட்டுள்ளது. இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு மோசமாகிக் கொண்டே செல்கிறது. நேற்று மட்டும் கொரோனா தொற்று பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3.4 லட்சத்தை தாண்டி உள்ளது.

குஜராத் மருத்துவமனையில் கொரோனா பாதித்த மகனுக்கு பெட் இல்லாததால் மகனுடன் தாயும் சாலையில் அமர்ந்து இருக்கிறார்.

இந்த வீடியோவை பார்த்த நடிகை ராதிகா சரத்குமார், மனமுடைந்து தனது ட்விட்டர் பக்கத்தில் தனது மனவேதனையையும், கோபத்தையும் பதிவிட்டுள்ளார்.

இதுகுறித்து ராதிகா பதிவிட்டுள்ள ட்விட்டர் பதிவில், இதயத்தை நொறுக்குவதாக இருக்கிறது. கோபம் வருகிறது, அதே நேரம் எதுவும் செய்ய முடியாத நிலை என தெரிவித்து கண்ணீர் தாரை தாரையாக ஓடும் எமோஜியை போஸ்ட் செய்திருக்கிறார்.

ராதிகாவின் ட்வீட்டை பார்த்தவர்கள், மிகவும்,கஷ்டமாக இருக்கிறது. குஜராத் அவர் மாநிலமாச்சே. அங்குமா இந்த அவல நிலை என்று கண்டனத்தை பதிவிட்டுவருகின்றனர்.

மேலும், சிலர் பெட் இல்லை, ஆக்சிஜன் இல்லை என்னங்கடா இது, 108 ஆம்புலன்ஸில் வந்தால் தான் அனுமதிப்போம் என்பது. சுத்த முட்டாள்தனமாக இருக்கே என்று கருத்து பதிவிட்டு வருகின்றனர்.


 

From around the web