‘ரவுடி பேபி’ ஆக மாறிய ஹன்சிகா... க்ளாப் அடித்து படப்பிடிப்பை தொடங்கி வைத்த வைரமுத்து!

 
Rowdy-Baby

ஹன்சிகா மோத்வானி நடிக்கும் புதிய படத்திற்கு ரவுடி பேபி என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.

தனுஷ் ஜோடியாக மாப்பிள்ளை படத்தில் அறிமுகமானவர் ஹன்சிகா மோத்வானி. இவர் தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோக்களான விஜய், சூர்யா, கார்த்தி, ஜெயம் ரவி உள்ளிட்ட பலருக்கு ஜோடியாக நடித்துள்ளார்.

இவர் கடைசியாக அதர்வாவுடன் 100 படத்தில் நடித்திருந்தார். அந்த திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றது.

அந்த திரைப்படத்தை அடுத்து மஹா படத்தில் நடித்தார். இதில் கௌரவ தோற்றத்தில் நடிக்க சிம்புவிடம் கேட்டபோது, ஹன்சிகாவின் பழைய கருத்து வேறுபாடுகளை மறந்து நடிப்பதற்கு சம்மதம் தெரிவித்தார். சிம்பு படத்திற்குள் நுழைந்ததும் அவரின் கதாபாத்திரம் அதிகம் வரும் படி கதை நீட்டிக்கப்பட்டது. இப்படத்தில் சிம்பு ஒரு பாடலிலும் நடித்துள்ளார். சமீபத்தில் இப்படத்தின் டீசர் வெளியானது.

105 மினிட்ஸ் திரைப்படத்தில் ஹான்சிகாவைத் தவிர வேறுயாரும் இல்லை. 105 மினிஸ்ட் ஒரே ஷாட்டில் எடுக்கப்பட்ட திரைப்படமாகும். இத்திரைப்படத்தை ராஜு டுஸ்ஸா எழுதி இயக்கிறார். பொம்மக் சிவா தனது ருத்ரன்ஷ் செலுலாய்ட் சார்பில் தயாரித்துள்ளார். இப்படமும் ரிலீசுக்குதயாரா உள்ளது.

இந்நிலையில் ஹன்சிகா மோத்வானி நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு இன்று தொடங்கியுள்ளது. ரவுடி பேபி எனப் பெயரிடப்பட்டுள்ள இப்படத்தை அறிமுக இயக்குநர் ராஜ சரவணன் இயக்குகிறார்.

ரமேஷ் பிள்ளை தயாரிக்க, பி.செல்லத்துரை ஒளிப்பதிவு செய்கிறார். சாம்.சி.எஸ் இசையமைக்கிறார். இப்படத்திற்கான பாடல்களை எழுதும் கவிஞர் வைரமுத்து, க்ளாப் அடித்து இப்படத்தின் படப்பிடிப்பைத் தொடங்கிவைத்தார். இப்படத்தில் சத்யராஜ், ரம்யா கிருஷ்ணன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளனர்.

From around the web