எனக்கு ஒரு குருவாக கடவுளுக்கு மேல்... மிஸ் யூ அப்பா! உருக்கத்துடன் கருணாநிதி பிறந்தநாளை கொண்டாடிய குஷ்பு!

 
Kushboo

மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பிறந்தநாளை முன்னிட்டு நடிகை குஷ்பு ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

முன்னாள் முதல்வரும் திமுக தலைவராக இருந்தவருமான கருணாநிதியின் 98-வது பிறந்த நாள் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. மாநிலம் முழுவதும் திமுகவினர் ஊரடங்கில் கொண்டாடி வருகின்றனர். மேலும் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள், அமைப்பினர் வாழ்த்து கூறி வருகின்றனர்.

தமிழ்நாட்டின் பெரும்பாலான வீடுகளில் கருணாநிதியின் புகைப்படமும் வைத்து பிறந்தநாளை கொண்டாடி வருகின்றனர். மேலும் சென்னை மெரினா கடற்கரையில் உள்ள கலைஞர் மு.கருணாநிதி நினைவிடத்தில், இன்று காலை முதல்வர் மு.க.ஸ்டாலின் மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

இந்நிலையில் கருணாநிதியின் பிறந்தநாளை முன்னிட்டு பாஜகவை சேர்ந்த குஷ்பு உருக்கத்துடன் ட்விட்டரில் வாழ்த்து கூறியுள்ளார். அதில், நான் ஒருநாள் கூட கருணாநிதியை உணராத நாளில்லை எனக்கு ஒரு குருவாக கடவுளுக்கு மேல் அவர் இருந்தார் என்றும், அவர் என்னுடைய மிகச் சிறந்த ஆசிரியராகவும் இருந்தார். உங்கள் ஆசிர்வாதம் எப்போதும் என் மீது பொழியும் என்று நான் நம்புகிறேன் என்றும், மிஸ் யூ அப்பா என்றும் பதிவு செய்துள்ளார். இந்த ட்விட் போது வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.


 

From around the web