மாநாடு படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் டிராக்... யுவன் வெளியிட்ட ஸ்பெஷல் அப்டேட்!

 
Maanaadu

மாநாடு படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் டிராக் மிக விரைவில் வெளியாக இருப்பதாக இப்படத்தின் இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா தெரிவித்துள்ளார்.

வெங்கட் பிரபு இயக்கத்தில் சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் உருவாகி வரும் படம் ‘மாநாடு’. இந்தப் படத்தில் சிம்பு கதாநாயகனாக நடிக்கிறார். மேலும் கல்யாணி பிரியதர்ஷன், பாரதிராஜா, இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர், எஸ்.ஜே.சூர்யா, ஒய்.ஜி.மகேந்திரன், டேனியல் பாலாஜி, மனோஜ், பிரேம்ஜி, உதயா, அரவிந்த் ஆகாஷ், படவா கோபி, அஞ்சனா கீர்த்தி மற்றும் பலர் நடித்து வருகின்றனர்.

இப்படத்துக்கு ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பு உள்ளது. இந்தாண்டின் தொடக்கத்தில் இப்படத்தை வெளியிட படக்குழு திட்டமிட்டு இருந்தது. கொரோனா முதல் அலை காரணமாக படப்பிடிப்பு பணிகளை தொடர முடியாமல் போனது.

அதை தொடர்ந்து படத்தின் தயாரிப்பு பணிகள் நடைபெற்ற போது கொரோனா இரண்டாவது அலை ஏற்பட்டது. இதனால் படத்தின் பணிகள் மீண்டும் பாதிக்கப்பட்டன. எனினும் நெருக்கடியாக காலக்கட்டத்திற்கு இடையில் மாநாடு படத்தின் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று முடிந்தன.

கடந்த 14-ம் தேதி ரம்ஜான் பண்டிகை முன்னிட்டு வெளியாகும் என தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி அறிவித்திருந்த நிலையில், இயக்குநர் வெங்கட் பிரபுவின் தாயார் காலமானார். இதனால் மாநாடு படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் டிராக் வெளியாகாது என்று தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தற்போது அறிவித்தார்.

இந்நிலையில் மாநாடு படத்தின் இசையமைப்பாளரான யுவன் ஷங்கர் ராஜா தனது ட்விட்டர் பக்கத்தில், 'மாநாடு' படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் பாடல் மிக விரைவில் வெளியாக இருப்பதாக அறிவித்துள்ளார். இதனால் சிம்பு மற்றும் யுவன் சங்கர் ராஜா ரசிகர்கள் குஷியில் உள்ளனர்.


 

From around the web