பிரபல வில்லன் நடிகர் கைகலா சத்யநாராயணா கவலைக்கிடம்!

 
Kaikala-Satyanarayana

தமிழில் ‘பஞ்சதந்திரம்’ உள்பட பல திரைப்படங்களில் நடித்த குணசித்திர வில்லன் நடிகர் கைகலா சத்யநாராயணா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கமல்ஹாசனின் ‘பஞ்சதந்திரம்’ படத்தில் ஸ்ரீமனின் மாமனாராக நடித்து தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் கைகலா சத்யநாராயணா. பெரியார் படத்தில் பெரியாரின் தந்தை கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார்.

தெலுங்கில் 750-க்கும் மேற்பட்ட படங்களில் வில்லன், குணச்சித்திர வேடங்களில் நடித்து இருக்கிறார். கடைசியாக 2019-ல் வெளியான மகேஷ்பாபுவின் மகிரிஷி படத்தில் நடித்து இருந்தார்.

86 வயதான கைகலா சத்யநாராயணாவுக்கு சில மாதங்களுக்கு முன் மூச்சுத்திணறல் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைக்கு பின், குணமடைந்து வீடு திரும்பினார். இந்த நிலையில் கைகலா சத்ய நாராயணாவுக்கு மீண்டும் மூச்சுத்திணறல் ஏற்பட்டது.

இதையடுத்து ஐதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவரது உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாகவும், செயற்கை சுவாச கருவி உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

From around the web