பிரபல திரைப்பட மூத்த நடிகர் செல்லதுரை காலமானார்!

 
பிரபல திரைப்பட மூத்த நடிகர் செல்லதுரை காலமானார்!

பிரபல திரைப்பட மூத்த நடிகர் செல்லதுரை நேற்று மாலை காலமானார். அவருக்கு வயது 84.

கத்தி, ராஜாராணி, தெறி, மாரி, சிவாஜி உள்ளிட்ட பல வெற்றி படங்களில் நடித்தவர் செல்லதுரை. இவர் நேற்று கழிவறையில் சுய நினைவு இல்லாமல் இருந்துள்ளார்.

அதைக்கண்ட குடும்பத்தார் அவரை மருத்துவமனைக்கு அழைத்து செல்ல அவர் உயிரிழந்தது தெரிந்துள்ளது. மாரடைப்பு ஏற்பட்டு அவர் இறந்திருக்கலாம் என்கின்றனர்.

மூத்த நடிகர் செல்லதுரை மரண செய்தி குறித்து அறிந்தவர்களோ இந்த ஆண்டு திரைத்துறையினருக்கு கருப்பு ஆண்டு. அடுத்தடுத்து இழப்புகளாக இருக்கிறது.

கடந்த 17-ம் தேதி தான் சின்ன கலைவாணர் விவேக் மாரடைப்பால் மரணம் அடைந்தார். இதையடுத்து நேற்று மாலை செல்லதுரை இறந்திருக்கிறார். இன்று அதிகாலை 3 மணிக்கு பிரபல ஒளிப்பதிவாளரும், இயக்குநருமான கே.வி. ஆனந்த் மாரடைப்பால் மரணம் அடைந்தார்.

இந்த ஆண்டு இன்னும் எத்தனை இழப்புகளோ என தெரிவித்துள்ளனர். மேலும் செல்லதுரை ஐயா மற்றும் கே.வி. ஆனந்த் ஆகியோரின் ஆத்மா சாந்தியடைய பிரார்த்தனை செய்வதாக பலரும் சமூக வலைதளங்களில் கூறி வருகிறார்கள்.

From around the web