சீதையாக நடிக்க ரூ.12 கோடி சம்பளம் கேட்ட பிரபல பாலிவுட் நடிகை..!

 
Kareena-Kapoor

ராமாயணத்தில் இடம்பெறும் சீதா தேவியை மையமாக வைத்து இந்தியில் உருவாக உள்ள புதிய திரைப்படத்தில் நடிகை கரீனா நடிக்க பல கோடி சம்பளம் கேட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ராமாயண கதையை ஏற்கனவே சிலர் படமாக எடுத்து வெளியிட்டுள்ளனர். தெலுங்கில் ஸ்ரீராமராஜ்ஜியம் என்ற பெயரில் வெளியான ராமாயண படத்தில் பாலகிருஷ்ணா ராமராகவும், நயன்தாரா சீதையாகவும் நடித்து இருந்தனர்.

இந்த நிலையில் ராமாயண கதையை மையமாகக்கொண்டு ‘ஆதிபுருஷ்’ என்ற பெயரில் படம் உருவாகி வருகிறது. இதில் ராமராக பிரபாஸ் நடிக்க, ராவணனாக ஹிந்தி நடிகர் சயீப் அலிகான் நடிக்கிறார். தமிழ், இந்தி, கன்னடம், மலையாளம் என பல்வேறு மொழிகளிலும் இந்த படத்தை டப்பிங் செய்து வெளியிட திட்டமிட்டுள்ளனர்.

இதே போல், இந்தியிலும் ராமாயண கதையை மையமாகக்கொண்டு ‘சீதா’ என்ற பெயரில் படம் உருவாகி வருகிறது. சீதையின் பார்வையில் காட்சிகள் நகர்வது போன்று திரைக்கதை அமைத்துள்ளதால் இப்படத்திற்கு ‘சீதா’ என்று பெயர் வைத்துள்ளனர்.

இந்த படத்தில் சீதையாக நடிக்க பிரபல பாலிவுட் நடிகை கரீனா கபூரை அணுகினர். கதை கேட்டதும் நடிக்க சம்மதம் தெரிவித்துள்ள அவர், அப்படத்தில் நடிக்க ரூ.12 கோடி சம்பளம் கேட்டுள்ளாராம்.

முந்தைய படங்களுக்கு ரூ.8 கோடி வாங்கிய அவர் ரூ.12 கோடி கேட்டது படக்குழுவினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 10 மாதங்கள் தொடர்ச்சியாக படப்பிடிப்பில் பங்கேற்க வேண்டி இருப்பதால் இந்த தொகையை அவர் கேட்டதாக கூறப்படுகிறது. கரீனா கேட்ட சமபளத்தை கொடுத்து ஒப்பந்தம் செய்வதா அல்லது வேறு நடிகையை பார்ப்பதா என்று படக்குழுவினர் யோசிக்கின்றனர்.

From around the web