பிரபல பாலிவுட் நடிகர் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை..!

 
Sonu-Sood

பிரபல பாலிவுட் நடிகர் சோனு சூட் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தியதாக தகவல் வெளியாகி உள்ளது.

மும்பையில் உள்ள பிரபல பாலிவுட் நடிகர் சோனு சூட்டின் வீடு உள்பட அவருக்குச் சொந்தமான ஆறு இடங்களில் வருமான வரித்துறையினர் இன்று சோதனை மேற்கொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

டில்லி அரசின் மாணவர்களுக்கான வழிகாட்டல் திட்டத்தின் விளம்பர தூதராக நடிகர் சோனு சூட் அறிவிக்கப்பட்ட நிலையில், அவரது வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டுள்ளனர்.

ஆம் ஆத்மி கட்சியில் சோனு சூட் இணைய உள்ளதாக தகவல் வெளியான நிலையில், இதுகுறித்து அவரிடம் கேள்வி எழுப்பப்பட்டது. ஆனால், அதற்கு பதிலளிக்க அவர் மறுத்துவிட்டார்.

கொரோனா பெருந்தொற்றின்போது, பல்வேறு தொண்டு செயல்களை செய்ததற்காக சோனு சூட்டுக்கு பல்வேறு தரப்பினர் பாராட்டு தெரிவித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

From around the web