பிரபல நடிகை திடீர் திருமணம்! பெங்களூர் தொழிலதிபரை மணந்தார்!!

 
Pranitha

பிரபல நடிகை ப்ரணிதா தொழிலதிபர் ஒருவரை திருமணம் செய்து கொண்டார்.

பெங்களூருவை சேர்ந்த நடிகை ப்ரணிதா சுபாஷ் கடந்த 2010-ம் ஆண்டு போக்கிரி என்ற கன்னட படம் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து தெலுங்கு படங்களில் நடித்த அவர் 2011-ல் வெளியான உதயன் என்ற தமிழ் படம் மூலம் அறிமுகமானார்.

பெரும்பாலும் கன்னடம், தெலுங்கு படங்களில் மட்டுமே நடித்துள்ள இவர் கார்த்தி உடன் சகுனி, சூர்யா உடன் மாசு என்கிற மாசிலாமணி ஆகிய படங்களில் நடித்துள்ளார். கடைசியாக தமிழில் அதர்வா உடன் 2017-ம் ஆண்டு ஜெமினிகணேசனும் சுருளிராஜனும் படத்தில் நடத்தவர் அதன்பிறகு தமிழ் திரையுலகம் பக்கம் வரவே இல்லை.
 
இந்நிலையில் ப்ரணிதா சுபாஷ் பெங்களூரைச் சேர்ந்த தொழில் அதிபரான நிதின் ராஜுவை நேற்று திருமணம் செய்துகொண்டுள்ளார். இதுகுறித்து முன் அறிவிப்பு எதுவும் இல்லாத நிலையில், 30-ம் தேதி திருமணம் நடைபெற்று முடிந்துவிட்டதாக இன்ஸ்டாகிராமல் பதிவிட்டுள்ளார்.

A post shared by Pranitha Subhash 🧿 (@pranitha.insta)

உறவினர்கள், நண்பர்கள் மூலம் திருமணப் புகைப்படங்கள் வெளியானதை அடுத்து அவர் திருமணமானதை உறுதிபடுத்தியுள்ளார். கொரோனா 2-வது மிக அதிகமாக இருப்பதால் திருமணத்தில் உறவினர்கள் மட்டும் கலந்து கொண்டதாகவும், முன்னரே தெரிவிக்காததற்கு மன்னிக்கவும் என இன்ஸ்டாகிராம் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

நடிகை ப்ரணிதாவுக்கு தமிழ், தெலுங்கு, கன்னட திரையுலகினர், ரசிகர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

From around the web