பிரபல நடிகை தூக்கிட்டு தற்கொலை; சிக்கியது 4 பக்கத்தில் எழுதிய பரபரப்பு கடிதம்

 
Soujanya

கன்னட டிவி நடிகை சௌஜன்யா இன்று காலை பெங்களூருவில் உள்ள அவரது இல்லத்தில் தூக்கிட்ட நிலையில் பிணமாக மீட்கப்பட்டார்.

கன்னட தொலைக்காட்சி சீரியல் நடிகை சௌஜன்யா பெங்களூரு அருகே உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் இன்று காலை மின்விசிறியில் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டார். சௌஜன்யா கன்னடப் படத்திலும் பணியாற்றியுள்ளார். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

அவரது வீட்டில் இருந்து ஆங்கிலம் மற்றும் கன்னடத்தில் எழுதப்பட்ட நான்கு பக்க கடிதத்தை போலீசார் கைப்பற்றி உள்ளனர். அந்த கடிதத்தில், உடல்நலக் குறைவாலும் சினிமா துறையில் தற்போதைய சூழல் காரணமாகவும், கடந்த பல நாட்களாக சிரமப்பட்டு வந்துள்ளார். இத்தகைய சூழ்நிலையில் இந்த முடிவை எடுப்பதைத் தவிர வேறு வழி தெரியவில்லை என்று சௌஜன்யா குறிப்பிட்டுள்ளார்.

அந்தக் கடிதத்தில் செப்டம்பர் 27, 28 மற்றும் 30 ஆகிய மூன்று தேதிகள் எழுதப்பட்டுள்ளன. இதில் இருந்து சௌஜன்யா மூன்று நாட்களுக்கு முன்பே தன் உயிரை மாய்த்துக் கொள்ள முடிவு செய்ததாக போலீசார் கருதுகின்றனர்.

From around the web