விஜய்யின் வெற்றி ரகசியத்தை பகிர்ந்த பிரபல நடிகர்

 
Prithiviraj-Vijay

விஜய் நடிக்கும் படங்கள் வெற்றி பெற்று வசூல் குவிப்பது பிற மொழி நடிகர்களை ஆச்சரியப்படுத்தி உள்ளது.

விஜய்யின் வெற்றி ரகசியம் பற்றி பிரபல மலையாள நடிகர் பிருதிவிராஜ் பேசிய வீடியோ ஒன்று சமூக வலைத்தளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

அதில் விஜய்யிடம் உங்களுக்கு கேள்வி கேட்க வாய்ப்பு கிடைத்தால் என்ன கேள்வி கேட்பீர்கள்? என்று கேட்கப்பட்டது. அதற்கு பதில் அளித்து பிருதிவிராஜ் கூறும்போது, “விஜய்யிடம் உங்களுடைய வெற்றிக்கான மந்திரம் பற்றி சொல்லுங்கள் என்று கேட்பேன். விஜய்க்கு எந்த மாதிரியான படம் வெற்றி பெறும் என்று நன்றாக தெரியும். ஒரு கதையை கேட்கும்போதே அது வெற்றி பெறுமா? இல்லையா என்பதை விஜய்யால் கணித்து விட முடிகிறது. எந்த கதை வெற்றி பெறும் என்பது அவருக்கு நன்றாகவே தெரியும். எல்லா நடிகர்களுக்கும் இந்த திறமை இருக்க வேண்டும்” என்று கூறியுள்ளார்.

பிருதிவிராஜ் தமிழில் மொழி, சத்தம் போடாதே, கண்ணாமூச்சி ஏனடா, நினைத்தாலே இனிக்கும் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

From around the web