பயப்படாம தடுப்பூசி போட்டுக்கோங்க... டூயல் ரோலில் வீடியோ வெளியிட்ட வரலட்சுமி!

 
Varalaxmi

தடுப்பூசி போட்டவர்கள் கொரோனாவில் இருந்து தப்பித்து கொள்ளலாம் என நடிகை வரலட்சுமி சரத்குமார் விழிப்புணர்வு வீடியோ மூலம் வலியுறுத்தி உள்ளார்.

தமிழ்நாட்டில் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், கொரோனா 2-ம் அலையின் தீவிரம் படிப்படியாக குறையத் தொடங்கியுள்ளது. கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்த பொதுமக்கள் அனைவரும் தடுப்பூசி போட்டுக் கொள்ளுமாறு தமிழ்நாடு அரசு கேட்டுக் கொண்டுள்ளது.

அனைவருக்கும் தடுப்பூசி கிடைக்கும் வகையில் அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. ஆனால், பொதுமக்கள் சிலர் தடுப்பூசி போட்டுக் கொள்வதில் அலட்சியம் காட்டுகின்றனர் என தொடர்ந்து புகார் எழுந்த வண்ணம் உள்ளன.

இதனால் அரசு தரப்பிலும், திரைப்பிரபலங்கள் பலரும் கொரோனா தடுப்பூசி தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார்கள். நடிகர்கள், நடிகைகள் பலரும் தடுப்பூசி போட்டுக்கொண்டு அவை தொடர்பான புகைப்படங்களை வெளியிட்டு வருகின்றனர்.

A post shared by Varalaxmi Sarathkumar (@varusarathkumar)

இந்நிலையில் நடிகை வரலட்சுமி சரத்குமார் தடுப்பூசி குறித்த வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் தடுப்பூசி போட்டுக் கொள்வது எவ்வளவு முக்கியம் எனவும். அதற்கு பயப்படத் தேவையில்லை எனவும் கூறியுள்ளார். தடுப்பூசி என்பது ஹெல்மெட் போன்றது. விபத்தின்போது ஹெல்மெட் அணிந்திருந்தால் உயிர் பிழைத்துகொள்ளலாம். அதேபோல தடுப்பூசி போட்டவர்கள் கொரோனாவில் இருந்து தப்பித்து கொள்ளலாம் என தெரிவித்துள்ளார். அந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

From around the web